அமெரிக்கா – சென்னை – மும்பை
மும்பை இயக்கத் தோழர்கள் பெரியார் பாலாஜி – கோமதி இணையரின் மகள் யாழினியின் 3 ஆவது பிறந்த நாளையொட்டி, பெரியார் பிஞ்சு இதழுக்கு நன்கொடை
ரூ.2 ஆயிரம், விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு நன் கொடை ரூ.2 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
ரூ.2 ஆயிரம், சாமி.கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2,000 ஆக மொத்தம் 8,000 ரூபாய் நன்கொடையை பெரியார் பாலாஜி வழங்கினார்.
அமெரிக்காவில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜூம் காணொலி நிகழ்ச்சியில் (08.08.2021), திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இந்தக் குழந்தைக்கு “யாழினி” எனப் பெயர் சூட்டினார்கள். அதாவது நிகழ்ச்சி ஏற்பாடு அமெரிக்கா, ஆசிரியர் பேசியது சென்னையில் இருந்து, பெயர் சூட்டப்பட்ட குழந்தை வசிப்பது மும்பையில்! 1938 இல் பெரியார் பேசிய இனி வரும் உலகம் தான், இன்றைய உலகமாக இருக்கிறது!
– – – – –
திருச்சி மாநகர பகுத்தறிவாளர் கழக தோழர் இரா.மணியன் அவர்களின் வாழ்வினையர், திருமிகு ம.கஸ்தூரி அம்மையார் கடந்த 29.7.2019 அன்று இயற்கை எய்தினார். அம்மையாரின் விருப்பத்தின்படி அவரது உடல் 30.7.2019 அன்று திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடை யாக வழங்கப்பட்டது. அதன் அய்ந்தாம் ஆண்டு நினை வாக இரா.மணியன் குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். நன்றி.