திராவிடர் கழக பொதுக்குழு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,

viduthalai
4 Min Read

இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா! மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி!
எழுச்சியுடன் நடத்திட குடந்தை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கும்பகோணம், ஜூலை 28- கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கும்பகோணம் பெரியார் மாளிகையில் 27.7.2024 அன்று மாலை 6:30 மணி அளவில் நடைபெற்றது.

கும்பகோணம் மாநகரத் தலைவர் வழக்குரைஞர் பீ. ரமேஷ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினார். கும்பகோணத்தில் குறுகிய கால இடைவெளியில் திராவிடர் கழக பொதுக்குழு, ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்திட கும்பகோணம் மாவட்ட தோழர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கண்ட நிகழ்வுகளை மிக எழுச்சியுடன் நடத்திட கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டிய அவசியம் குறித்து அவர் விளக்கமாகப் பேசினார்.

திராவிடர் கழகம்

மாவட்ட கழக காப்பாளர்கள் தஞ்சை மு. அய்யனார், தாராசுரம் இளங்கோவன், இலங்கை கோவிந்தன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி அமர்சிங், கும்பகோணம் மாவட்ட தலைவர் ஆர் பி எஸ் சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ. வீரையன், திருவாரூர் மாவட்ட தலைவர் வி. மோகன், நாகை மாவட்ட தலைவர் வி எஸ் பி ஏ நெப்போலியன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன், தலைமை கழக அமைப்பாளர் க.குருசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆடிட்டர் சு. சண்முகம், குடந்தை மாவட்ட துணைத்தலைவர் அழகுவேல், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் மணி ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்.

தொடர்ந்து மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், தலைமை கழக அமைப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில செயலாளர் இளமாறன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட தொழிலாளரணி துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி.

பெரியார் கண்ணன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், பாபநாசம் ஒன்றிய திராவிட கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, நகர தலைவர் இளங்கோவன், பாபநாசம் நகர செயலாளர் வீரமணி, கபிஸ்தளம் சைவராஜ், வலங்கைமான் ஒன்றிய தலைவர் பவானி சங்கர், திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் துகிலி தமிழ்மணி, திருவைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர் முருகானந்தம், நாச்சியார் கோயில் குணா, திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீரையன், குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், மன்னார்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர் எஸ் அன்பழகன், மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பநாதன், தஞ்சை மாநகரத் தலைவர் நரேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் சேதுராமன், மருதநல்லூர் சேக்கிழார், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், அய்யம்பேட்டை நகர செயலாளர் அறிவழகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திரிபுரசுந்தரி, குடந்தை மாவட்ட செயலாளர் சு துரைராஜ், குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு. நிம்மதி, குடந்தை ஒன்றிய தலைவர் கோபி மகாலிங்கம் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

இறுதியாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன், கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் அதிரடி அன்பழகன் ஆகியோர் திராவிடர் பொதுக்குழு மற்றும் பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவதின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்
கழக பொதுக்குழு உறுப்பினர் மாநகரச் செயலாளர் கா.சிவக்குமார் இறுதியாக நன்றியுரையாற்றினார்.

உப்பிலியாபுரம் ராதாகிருஷ்ணன், அறிவு விழி குரு, ராணி குரு, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ரஞ்சித் குமார், திருப்பனந்தாள் கலைவேந்தன், கனிமொழி, ரியாஸ் அகமது, செல்வராசன், பட்டீஸ்வரன், இளவழகன், மதியழகன், வைரமுடி, சிராஜுதீன், பிரவீன், ராஜ் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேல குடந்தை மேலக்காவேரி தொகுதி செயலாளர் மனோகரனின் தந்தையார் பாலு மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
குறுகிய கால இடைவெளியில் கும்பகோணத்தில் திராவிடர் கழக பொதுக்குழு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நிகழ்வுகளை நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

4.8.2024 அன்று குடந்தை ராயாமகாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் திராவிடர் கழக மாநில பொதுக்குழு, மாலை 4 மணிக்கு நடைபெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, மாலை 6 மணிக்கு உடம்பை கடலங்குடி தெருவில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ராஜகிரி கோ .தங்கராசு அவர்களின் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது மேற்கண்ட நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திட கழகத் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டது

மேற்கண்ட நிகழ்வுகளில் பங்கேற்க குடந்தைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு குடந்தை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் எழுச்சமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது மேற்கண்ட நிகழ்வுகளில் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிபிப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஜூலை 23 தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் காவிரி நீர் உரிமை கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்த கழகத் தோழர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *