நெல்லை, ஆக. 16- “நாங்குநேரி மாணவர், தங்கை வெட்டப்பட்ட விவ காரத்தில் கைது செய்யப் பட்ட மாணவரின் தந்தை பா.ஜ.க.வின் உறுப்பினர்” என்று நெல்லை கிழக்கு மாவட்டதிமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமானவர்கள் தி.மு. க.வைச் சேர்ந்தவர்கள் என ஒரு பொய்யான குற்றச்சாட்டை பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை 12.8.2023 அன்று விளாத்திகுளத்தில் பேசியுள்ளார். ஆனால் உண்மையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட மாணவன் சுப்பையா என்பவரின் தந்தை முருகன் என்பவர் பா.ஜ.க.வின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் நாங்குநேரி 4ஆவது வார்டு தலைவராக பணியாற்றியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பொதுமக் களிடம் தி.மு.க. அரசுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத வகையிலும் ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாங்குநேரி வழக்கில் குறிப்பிடப் பட்டுள்ள வழக்கின் எதிரியின் தந்தை முருகன் பா.ஜ.க. உறுப்பினர் அட்டை எண். 3056618106 ஆகும். தெலங்கானா ஆளுநராக இருக்கக்கூடியதமிழிசை சவுந்தர்ராஜன் தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக இருந்தபோது முருகனுக்கு உறுப்பினர் அட்டை 2019இல் வழங்கி யுள்ளார். முருகன் தற்போது 2024 வரை பா.ஜ.க. உறுப்பினராக நீடிக்கிறார்.
மேலும் பா.ஜ.க. கட்சி யின் மூத்த தலைவர், மேனாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தேர் தல் பிரச்சாரம் செய்துள்ளதை யெல்லாம் அண்ணாமலை மறைத்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயலாகும்.
இதை நெல்லை கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் வன்மை யாகக் கண்டிக்கிறது. இனிமேல் இது போன்ற நேரங்களில் ஆதாரம் இல்லாத எந்த செய்திகளை வெளியிடுவது என் பது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.
– இவ்வாறு இரா.ஆவுடையப்பன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.