தமிழ்நாட்டில் உள்ளது போல் நடுநிலையாக செயல்படும் அறநிலையத்துறை மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் கிடையாது,
பாஜக ஆளும் மாநிலங்களில் கோவில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் கைகளில் தான், அதுபோல் தான் மத்தியப் பிரதேசத்திலும் – 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அங்கு கோவில் வருவாய் குறித்து எந்த ஒரு தணிக்கை அறிக்கையும் கிடையாது.
2019ஆம் ஆண்டு சில மாதங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்போது கோவில் நிதி நிலைதொடர்பாக தணிக்கை அறிக்கையை வெளியிட முடிவு செய்தது, இதுவும் கமல்நாத் ஆட்சி கவிழ ஒரு காரணமாக அமைந்தது.
அதன் பிறகு மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார். வந்த உடனேயே கோவில்கள் தொடர்பான எந்த ஒரு செயல்பாட்டிலும் அரசு தலையிடாது என்று அறிக்கை விட்டார்.
மத்தியப்பிரதேச அரசு அறநிலையத்துறையின் கீழ் உஜ்ஜைன் கோவில் நிர்வாகமும் வருகிறது.
இந்த உஜ்ஜைன் கோவிலின் கீழ் உஜ்ஜை மற்றும் ரேவா, கண்டேல்வால், சாகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பார்ப்பன அர்ச்சகர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மாதம் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை ஊதியம் தரப்படுகிறது.
ஊதியம் மட்டுமல்ல, பார்ப்பனர்களுக்கு மாதம் மாதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் உணவுப்பொருட்கள் (விலை உயர்ந்த உலர் பழங்கள் முதல் நெய், அரிசி, கோதுமை மாவு) உள்ளிட்டவைகளோடு ஆடைகளும் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமா, விசேட நாட்கள் என்று சொல்லப்படும் அமாவாசை, பவுர்ணமி, உள்ளிட்ட மாதம் முழுவதும் வரும் நாட்களில் ‘ஓவர் டைம்’ என்ற பெயரில் மேலும் அதிகப் பணம் என மாதம் தோறும் பணமழையில் நனைந்துகொண்டே இருக்கின்றனர்.
உஜ்ஜைன் உள்ளிட்ட கோவில்களில் உண்டியல் பணம் கோடிகளில் வசூலாகிறது, அதற்கு எல்லாம் கணக்கு என்று இணையத்தில் தேடினால் கூடக் கிடைக்காது.
அப்படியே தணிக்கை அறிக்கை பற்றி யாராவது பேசினால் அந்த அதிகாரிகள் உடனடியாக இட மாற்றம் செய்யப்பட்டு விடுவார்கள்.
மத்தியப் பிரதேச பள்ளிக்கல்வித்துறையின் ெசயல்பாடு என்ன? மரத்தடியிலும், மாட்டுத் தொழுவத்திலும், பள்ளிகள் நடக்கின்றன. தோட்டங்களில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் இருந்து பணியாளர்கள் பிடித்துக்கொண்டு வரும் தண்ணீர் தான் மாணவர்களுக்குக் குடிநீர்.
உப்பும், காய்ந்த ரொட்டியும் அரைகுறையாக வேக வைத்த கொண்டைக்கடலையும் தான் மாணவர்களுக்கு மதிய உணவு என்பது எத்தகைய பரிதாபம்.
பச்சையாக சொன்னால் பா.ஜ.க. ஆட்சி என்றால் பச்சைப் பார்ப்பன பகிரங்க ஆட்சியே!
‘‘பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை’’ என்ற நிலைதான்!
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் போல் வட மாநிலங்களிலும் தோன்றி செயல்பட்டால் ஒழிய – பார்ப்பன ஆதிக்க வல்லாண்மை சாம்ராஜ்ஜியத்திற்கு ஒரு முடிவு ஏற்படாது.
தந்தை பெரியார் காற்று வடக்கிலும், சுழன்றடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதனை மேலும் விரிவாக்க வேண்டும்.