சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

1 Min Read

அரசியல்

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி, மூங்கில்அரிசி இட்லி, கருப்பு கவுனி தோசை, அவுல் ரொட்டி, ராகி இடியாப்பம், சத்துமாவு கஞ்சி, உளுந்து கஞ்சி, சாமை உப்புமா, ராகி மசாலா பூரி ஆகியவை தயாரித்தல் மற்றும் தொழில் விவரங்கள் குறித்து கற்றுத் தரப்படும்.

ஆண், பெண் இரு பாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். வேலைக்கு செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். ஆக. 28இல் தொடங்கி 30ஆம் தேதி வரை காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி நடைபெறும்.

இதில் பங்கேற்க கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல்படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18-க்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் ஒன்றிய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி குறித்து கூடுதல் விவரங்களை 81227 17494, 8248309134 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *