சென்ற பல ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சித் தலைவராயிருந்து பேரார்வத்துடன் தம் கட்சிக்குத் தொண்டு செய்துவந்த பனகால் ராஜா, ஒரு வாரம் ஜூரம் அடித்த காரணத்தினால் மரணமடைந்து விட்டதை நேயர்கள் அறிந்திருப் பார்கள். சென்னையிலே பனகால் ராஜா இறந்தார் என்ற செய்தி கேட்டவுடன் ஜனங்களுக்குள் என்னவிதமான பரபரப்பும். துக்கமும் ஏற்பட்ட தென்பதை நன்றாகக் கண்ணால் பார்த்தும் விவரிக்க முடியாமலே இருக்கிறது.
பனகால் இறந்ததனால் ஜஸ்டிஸ் கட்சியார் மட்டும் துக்கப் பட்டார்களென்று சொல்ல முடியாது. எந்தக் கட்சியாருடைய துயரத்திற்கும் அளவே இல்லை. ஏனென்றால், பனகாலை மூன்று விதமாகப் பிரிக்கவேண்டும். மனிதப் பனகால், மந்திரிப் பன கால், கட்சிப் பனகாலென்று மூன்று விதமான தன்மைகளில் பனகால் அரசரை நோக்குவோமாயின், அவருடைய பிரிவைக் குறித்து இந்தியர் ஒவ்வொருவரும் துக்கித்தே ஆகவேண்டுமென்பது வெள்ளிடை மலையாகும். (ஜனவரி – 1929)
நன்றி: ஆனந்தவிகடன் “காலப்பெட்டகம்” பக்கம் 19