விழுப்புரம், ஆக. 16- தமிழ்நாட்டில் புதிரை வண்ணர் சமூக மக்களின் முன்னேற்றத்திற் காக கடந்த 21 ஆண்டுகளாக துரும்பர் விடுதலை இயக்கம் பணியாற்றி வருகிறது. கடந்த மே மாதம் 17ஆம் தேதியன்று துரும்பர் துளிர் கோடை முகாம் குழந்தைகள் தங்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள். பெரியார் திட லைச் சுற்றிப் பார்த்து பெரியா ரைப் பற்றி அறிந்து கொண் டார்கள். இந்நிலையில் புதிரை வண்ணார் நலவாரியம் திருத்தி அமைக்கப்பட்டது தொடர்பாக கடந்த 7.8.2023 அன்று தாங்கள் வெளியிட் டுள்ள அறிக்கை எம் சமூக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கைக்காக துரும்பர் விடுதலை இயக்கத் தின் சார்பில் மனமார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள்கி றோம்.
ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற தங்க ளுக்கு துரும்பர் விடுதலை இயக்கத்தின் வாழ்த்துகளை யும் பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம் என்று அமைப்பாளர் அருட்பணி இ.ஜீ.அருள்வளன் மற்றும் இணை அமைப்பாளர் அருட் சகோதரி அ.ஞா.அல்போன்சா தெரிவித்துள்ளார்.