கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தால் நீட் பிரச்சினை தமிழ்நாட்டில் தீர்வு காணும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், சுதந்திர நாள் உரையில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி பெரும்பான்மையின் அடிப்படையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன, மேலும் கூட்டாட்சி அமைப்பின் கட்டமைப்பை உடைக்க மோடி அரசு சதி என்று உத்தவ் தலைமையிலான சிவசேனா கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். ஓலா, உபேர், ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும், சுதந்திர நாள் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தி இந்து:
9,423 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று தலைமை நீதிபதி தனது சுதந்திர நாள் உரையில் கூறினார்
தி டெலிகிராப்:
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர நாள் பேச்சு, பொய்கள் மற்றும் தெளிவற்ற வாக்குறுதிகளால் நிரம்பி யுள்ளது என காங்கிரஸ் கண்டனம்.
நூஹ் வன்முறை தொடர்பாக கோரஷா பஜ்ரங் படையின் தலைவர் பிட்டு பஜ்ரங்கி கைது செய்யப்பட்டார்
– குடந்தை கருணா