தருமபுரி, ஜூலை 26 தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாக சுற்றுச்சுவர்களில் திருவள்ளுவர், காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், அப்துல்கலாம், காமராஜர் போன்ற தலைவர்களின் படங்களை வரைந்து உள்ளனர்.
அரசு அலுவலகங்களிலோ விளம்பரங்களிலோ நிழற்படங்களிலோ பதாகைகளிலோ தலைவர்களின் படத்தை வெளியிடுவதாக இருந்தால், வைத்தால், அது தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட படங்களாகவே இருக்கவேண்டும், வைக்க வேண்டும் என்ற விதி இருக்கின்ற நிலையை மறந்து, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாக சுற்றுசுவரில் காவி உடை அணிந்துள்ள திருவள்ளுவர் படத்தை வரைந்து, உத்திராட்சக் கோட்டை, திருநீறு பட்டை என போட்ட படத்தை வரைந்து திரு வள்ளுவரை ஒரு ஒரு மதத்திற்கு உரியவராக ஆக்கியுள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசு விதியை காற்றில் பறக்க விட்டு, பள்ளி நிர்வாகம் பல பிரச்சினைகளை உருவாக்கிய காவியுடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படத்தை வரைந்து உள்ளது. தமிழ் ஆர்வலர்களையும், சமூக சிந்தனையாளர்களையும் இச்செயல் கொதிப்படையச் செய்துள்ளது. எனவே, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து அர சால் வெளியிடப்பட்ட திருவள்ளு வர் படத்தை வரையுமாறு கேட்டுக்கொள்வதுடன் மற்ற பள்ளி களிலும் அரசு வெளியிடப்பட்ட படங்களையே வரைய வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அரசு விதியை கடைப்பிடிக்க வேண்டும்.