தஞ்சை, ஜூலை 26 சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை இராணி ஓட்டல் இராஜகோபால் மகனும், தஞ்சை மேனாள் நகர் மன்றத் தலைவர் தேன்மொழியின் வாழ்விணையரும் தஞ்சாவூர் திமுக நகர மேனாள் துணைச் செயலாளர், மேனாள் நகர் மன்ற உறுப்பினர் இரா.ஜெயபால் அவர்களின் ஏழாஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 25.07.2024 காலை 10.30 மணி அளவில் தஞ்சை நிர்மலா நகரில் உள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயபால் அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பகுத்தறிவாளர் கழக தஞ்சை மாவட்ட தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.ராமலிங்கம், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ. பெரியார்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினர்.
ஜெயபால் அவர்களின் வாழ்விணையர் தஞ்சை மேனாள் நகர் மன்ற தலைவர் தேன்மொழி, ஜெயபால் மகள்கள் ஹேமலதா, அனுராதா மருமகன்கள் கழக மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணகுமார், கழக தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீரகுமார், பேரக்குழந்தைகள் ச.இனியா, வீ.மகிழன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று கழகத் தோழர்களுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தஞ்சை மாநகரில் உள்ள திமுக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து வீரவணக்கம் செலுத்தி னர்.