காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி. அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காரைக்குடி ரயில்வே நிலைய சாலையில் உள்ள பெரியார் தோட்டத்தில், அவரது சிலைக்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மாவட்ட ப.க. தலைவர் எஸ்.முழுமதி, கல்லல் ஒன்றிய தலைவர் வீ.பாலு, தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ.தில்லைராசா, தி.தொ.ச. மாவட்ட தலைவர் சி.சூரியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, ஜெ.இங்கர்சால், சொ.ஜான்சி ராணி, இ.பெ.தமிழீழம், கு.ராஜ்குமார், கா.ரம்யமலர், ர.பு. சித்தார்த்தன், ர.பு.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.(25-07-2024).
காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி.யின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்
Leave a Comment