அரசாணை
அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2இல் 7,360 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை தனித்தனி அரசாணையை வெளியிட்டுள்ளது.
சமர்ப்பிக்க…
முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி நிதியுதவி ரூ.40 லட்சம் வரையிலும் 3 ஆண்டு காலம் பெறலாம். இதற்கான கருத்துருக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
அழைப்புகள்
செல்போனில் தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்களை தடுப்பதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.