முதலில் நிதி ஒதுக்கட்டும்!
* ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும்.
– ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
>> இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய அரசு நிதியை ஒதுக்கிவிட்டு, இப்படிப் பேசினால், நன்றாக இருக்கும்.
அது மட்டும் ஏன்?
* ஒரு மாநிலத்தின் பெயரை பட்ஜெட்டில் குறிப்பிட வில்லை என்றால், அரசு திட்டங்கள் அந்த மாநிலத்துக்கு கிடைக்காது என்று அர்த்தம் அல்ல!
– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
>> அப்படி என்றால் சில மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடுவது மட்டும் ஏன்? அங்கே தான் எழுகிறது பிரச்சினை.
எதிர்த்தது ஏன்?
* உதய் மின் திட்டம்பற்றி நேருக்கு நேர் வாதிக்க தயாரா என்று மேனாள் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு சவால் விடுத்துள்ளார்.
>> அப்படி என்றால் உதய் மின் திட்டத்தை மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தது ஏன்?