கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் கோவில் நிர்வாகம்
திருமலை, ஆக 17– சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத் தடி வழங்கப்படுகிறது.
திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கி யது. ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத் திற்கு வந்தது. இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலர் சிறுத்தையை மறைந் திருந்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.மேலும் காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.
தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத் தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த தால் பொதுமக்கள், பக் தர்கள் பீதியில் உள்ளனர். பக்தர்கள் தங்களை பாது காத்துக்கொள்ள நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் என அறி விக்கப்பட்டது. அதன் படி, திருப்பதி அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.
தேவஸ்தான பாது காவலர்கள் பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கி னர். இந்த கைத்தடிகள் ஏழுமலையான் கோவில் அருகே மீண்டும் சேகரிக் கப்படுகின்றன. 12 வய துக்குட்பட் டோருக்கு காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைப்பயணம் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. நடைப் பாதையில் இரவு நேரங் களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப் படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மீண்டும் சிறுத்தை நடமாட்டம் திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு தேவஸ்தா னம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. கடந்த சில நாட் களாக திருப்பதி மலைப் பாதையில் சிறுத்தை நட மாட்டம் அதிகரித்துள் ளது. அந்த சிறுத்தைக ளால் நடைப்பயணம் செல்லும் பக்தர்கள் மற் றும் சிறுவர்கள் தாக்கு தலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டி ருந்த, சிறுவனை சிறுத்தை ஒன்று வாயில் கவ்விச் சென்றது. பெற்றோர் மற்றும் கண்காணிப்புப் படையினரின் முயற்சி யால் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டன. இதே போல, தனது குடும்பத் துடன் நடைப்பயணம் சென்ற சிறுமியை சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் அந்த சிறுமி உயிரி ழந்துள்ளார்.
வனப்பகுதியில் சிறுமி யின் உடல் மீட்கப்பட்ட நிலையில், உடற் கூராய்வு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது
இந்நிலையில், மலைப் பாதையில் சிறுத்தைக ளின் நடமாட்டம் அதிக ரித்ததை கருத்தில் கொண்டு, அலிபிரி, சிறீ வாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறு வர்களுக்கு அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்த்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை முதல் (ஆகஸ்ட் 14) 15 வயதுட்குட்பட்ட சிறுவர்கள் நடைப் பய ணமாக மலையேறி செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இரு சக்கர வாகனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பயணிக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலையேறி செல் லும் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயர், பெற் றோர் பெயர் மற்றும் பெற்றோரின் தொலை பேசி எண் விவரங்கள் அடங்கிய டேக் ஒன்றை கையில் கட்டி காவல் துறையினர் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.