மெட்ரோ ரயில் நிதி: தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? மக்களவையை அதிரவைத்த டி.ஆர்.பாலு எம்.பி.

3 Min Read

புதுடில்லி, ஜூலை 25- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணி களுக்கு 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி கூட ஒதுக்கீடு செய்யவில்லை; ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி வேதனையை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் 2ஆம் கட்டம் 60% நிறைவடைந்தும் விட்டது என்றும் டி.ஆர்.பாலு எம்.பி. சுட்டிக்காட்டினார்.

18ஆவது மக்களவையின் 2ஆவது கூட்டம் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை கூடியதுமே நீட் முறைகேடுகள் விவகாரத்தை முன்வைத்து காரசார விவா தங்கள் நடைபெற்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தினர்.

ஆனால், நீட் தேர்வில் முறை கேடுகள் நடைபெறவில்லை என பதிலளித்தார் தர்மேந்திர பிரதான்.
இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது மக்களவை திமுக குழுத் தலைவர்

டி.ஆர்.பாலு பேசியதாவது:

சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் 60% பணிகள் நிறைவேறிய நிலையில் கூட ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால், நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
முன்னதாக தி.மு.க. மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி பேசுகையில், நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாண வர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாடாளு மன்றத்தில் நீட் தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணி களுக்கு 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி கூட ஒதுக்கீடு செய்யவில்லை; ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி வேதனையை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் 2ஆம் கட்டம் 60% நிறைவடைந்தும் விட்டது என்றும் டி.ஆர்.பாலு எம்.பி. சுட்டிக்காட்டினார்.

18ஆவது மக்களவையின் 2ஆவது கூட்டம் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை கூடியதுமே நீட் முறைகேடுகள் விவகாரத்தை முன்வைத்து காரசார விவா தங்கள் நடைபெற்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தினர்.

ஆனால், நீட் தேர்வில் முறை கேடுகள் நடைபெறவில்லை என பதிலளித்தார் தர்மேந்திர பிரதான்.
இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது மக்களவை திமுக குழுத் தலைவர்

டி.ஆர்.பாலு பேசியதாவது:

சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் 60% பணிகள் நிறைவேறிய நிலையில் கூட ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால், நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
முன்னதாக தி.மு.க. மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி பேசுகையில், நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாண வர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாடாளு மன்றத்தில் நீட் தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *