அரூர், ஜூலை 25- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம் பேருந்து நிறுத் தத்தில் 15.7.2024ஆம் தேதி பகல் 1 மணி அளவில் மாவட்ட இளை ஞரணி பொறுப்பாளர் அய்யனார் தலைமையில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயண கூட்டம் நடைபெற்றது.
திமுக, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் இணைந்து ஊர் வலமாகச் சென்று அங்குள்ள அண் ணல் அம்பேத்கர், இந்திரா காந்தி சிலைகளுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதி வதனி மாலை அணிவித்தார்.
மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கரு ணாநிதி தொடக்க உரையாற்றினர். இறுதியாக கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன், திமுக ரகுநாத், நரேஷ் வர்மா, தர்மலிங்கம், விசிக சார்பில் மாரியப்பன், வேலாயுதம், வல்லரசு, சுப்பையா, ஏழுமலை, வண்ணத்தமிழ், சிறீதர், பெரியார் தொண்டர் முத்துசாமி, மற்றும் பயணக் குழுவில் பங்கேற்ற மகளிர் அணி பொறுப்பாளர்கள் அம்மாபேட்டை மணி, உமா, வேப்பநத்தம் கல்பனா, வேப்பிலைப்பட்டி இ.சமரசம், பெரியார், சூர்யா, வெங்கட சமுத்திரம் சோழர்கள் சாய்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.