தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.7.2024) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 74 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.