சென்னை, ஜூலை 25 புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கை: தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து முடித்து, பட்டம், பட்டயம், மற்றும் அய்டிஅய்களில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்துக்கு ஆதார் எண் மிகவும் அவசியமாகிறது. பயனாளிகள் கட்டாயம் ஆதார் எண் வைத்துள்ளவராக இருத்தல் வேண்டும்.கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மய்யங்களுக்கு சென்று ஆதார் பதிவு செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்தப் பகுதியில் ஆதார் மய்யம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மய்யம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2.80 லட்சம் பேருக்கு
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்க அரசு திட்டம்
சென்னை,ஜூலை25 தமிழ்நாட்டில் உண வுத் துறை மற்றும் கூட் டுறவுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அத்தி யாவசியப் பொருட்கள் விநியோ கிக்கப்படுகின்றன.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை கேட்டு விண் ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வந்தன.
இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்தப்பட்டதால், குடும்ப அட்டை கேட்டு அதிகளவில் விண்ணப் பங்கள் குவிந்தன. இதை யடுத்து, புதிய அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டி ருந்தது. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பெரும்பான்மை தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. எனவே, புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், தமிழ் நாடு மின்னாளுமை முகமை மூலம் பரி சீலிக்கப்பட்டது. தொடர்ந்து, கள ஆய்வுப்பணியும் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 2.80 லட்சம் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை தமிழ் நாடு அரசு பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் முதல் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் எண்ணிக்கை 2.10 கோடியாக இருந்தது, இது 2022-ஆம் ஆண்டில் 2.20 கோடியாக அதி கரித்தது. இந்தாண்டு நில வரப்படி, 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைகள் உள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
தற்போது சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குடும் பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளன. தற்போது ஆய்வுப் பணிகள் தொடங்கின. அடுத்த மாதம் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.