தாம்பரம், ஆக. 17- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலா ளர் நூர்ஜஹான் அவர்கள் இல்லத் தில் 13.8.2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்டங்களின் திராவிட மகளிர் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.
திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர் இறைவி, வடசென்னை யுவராணி, தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை இரா.சு. உத்ராபழனிசாமி, தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் அருணாபத்மாசூரன், அவ ருடைய மகள் அனு, அஜய், சுயமரி யாதை திருமண இயக்குநர் பசும் பொன், ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர் பூவை செல்வி, தாம்பரம் மாவட்ட நகர செயலா ளர் மோகன்ராஜ், தமிழ்ச்செல்வன், பழனிசாமி, நூர்ஜஹான் – இராசு அவர்களின் உறவினர்கள் , மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந் துக் கொண்டனர்.
நூர்ஜஹான் – ராஜூ இணை யர்களின் 34ஆவது இணை யேற்பு நாள், ராஜூ அவர்களின் விருப்பப் பணி ஓய்வு ஆகியவற்றை முன் னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்வு செய்யப் பட்ட தின் மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000, ராஜூ அவர்களின் நூல் பரப்பும் பணியைத் ‘திருவள்ளுவர் மன்றம்’ பாராட்டியதின் மகிழ்வாக விடு தலை வளர்ச்சி நிதியாக ரூ.1000, ராஜூ அவர்களின் தமிழ் நெறி பரப்பும் பணியைத் ‘தலைநகர் தமிழ்ச்சங்கம்’ பாராட்டியதின் மகிழ் வாக திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000- என மொத்தம் ரூ.3000- நூர்ஜஹான் – ராஜூ இணை யர்களால் வழங்கப்பட்டது.