மோடியின் உரையை விட மக்களை அதிகம் கவர்ந்த ராகுல்காந்தி பேச்சு
புதுடில்லி, ஆக. 17– மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி ஆற்றிய பதில் உரையை விட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் பேச்சையே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் வெற்று வாக்கு றுதிகளை விட உண்மையான தலைவரின் பேச்சைக் கேட் பதில் மக்கள் ஆர்வம் காட் டுவது தெரியவந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக I.N.D.I.A. கூட் டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 8,9 ஆகிய தேதிகளில் மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 9ஆம் தேதி ராகுல் காந்தி 37 நிமிடங்கள் உரையாற்றினார். விவாதத்திற்கு பதில் அளித்து 10ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி 2 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். இருவரது உரைகளும் மக்க ளவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் சன்சத் தொலைக்காட்சியில் ஒளிப ரப்பு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் தளங்களிலும் இந்த உரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளன. இதில் மோடியின் பேச் சைவிட ராகுல் காந்தியின் பேச்சை கூடுதலாக பல லட்சம் பேர் பார்த்து இருப் பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சன்சத் தொலைக்காட்சி யில் ராகுலின் பேச்சை 3.5 லட்சம் பேரும், மோடி பேச்சை 2.3 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். யூடியூபில் ராகுலின் பேச்சை 26 லட்சம் பார்வையாளர்களும், மோடி பேச்சை 6.5 லட்சம் பார்வை யாளர்களும் பார்த்துள்ளனர். ட்விட்டரில் ராகுலின் பேச்சை 23 ஆயிரம் பேரும், மோடியின் பேச்சை 22 ஆயிரம் பேரும் பார்த்தனர். பேஸ்புக்கில் ராகுல் பேச்சுக்கு 73 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ள அதே சமயம் மோடி பேச்சுக்கு வெறும் 11,000 பார்வையாளர்களே கிடைத்துள்ளனர். இந்த தக வல்களை ட்விட்டரில் பகிர்ந் துள்ள காங்கிரஸ் கட்சி, வெற்று வாக்குறுதிகளைவிட உண்மையான தலைவரின் பேச்சை கேட்கவே மக்கள் விரும்புவார்கள் என்பது நிரூ பணமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.