சென்னை, ஜூலை 24- மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்காக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில், பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி… பி. எஸ்சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. மருத்துவ ஆய்வு தொழில் நுட்பம், பி.எஸ்சி. டயாலிசிஸ் தொழில்நுட்பம், பி.எஸ்சி. மருத்துவ உதவியாளர் உள்பட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன.
இதில், அரசு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 200 பட்டப்படிப்பு இடங்களும். சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இதற்கான 2024-2025ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 23ஆம் தேதி தொடங்கி, கடந்த ஜூன் 26ஆம் தேதி முடிவடைந்தது. அதில், 68 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு மருத்துவ பரிசோதனை
இந்த நிலையில், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை நேற்று (23.7.2024) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியரக இயக்குநரகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்கு 240 மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர்.அதில் 80 பேருக்கு நேற்று சிறப்பு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பரிசோதனை. நாளை (25.7.2024) வரை நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு, மருத் துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணா லதா, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு துணை இயக்குநர் சாந்தினிமுன் னிலையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக எலும்பியல், நரம்பியல் மற்றும் உடல் மருத்துவ நிபுணர்கள் உள்பட பல்வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் இயல்பு மற்றும் உடல் ஊனத்தின் அளவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருந்தால் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். 40 சதவீதத்திற்கு கீழ் மற்றும் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டர் சட்டத்தில் 11 பேர் கைது
குற்றச் செயலில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை உறுதி
சென்னை காவல்துறை ஆணையர் அருண் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 24- கடந்த 2 வாரத்தில் மட்டும் 11 பேர் குண்டர் சட் டத்தில் கைது செய் யப்பட்டு உள்ளனர். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப் படும் சென்னை ்காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்தார்.
குண்டர் சட்டம்
சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் – ஒழுங்கு குற்றங்களில் ஈடு பட்டதாக 411 பேர், திருட்டு. நகைபறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 130 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட் கள் விற்பனை செய்தாக 173 பேர், குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 29 பேர், சைபர் குற்றத்தில் ஈடு பட்டதாக 5 பேர் உள்பட மொத்தம் 780 பேர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாரபட்சமின்றி நடவடிக்கை
இந்தநிலையில் கட்ந்த 8-ஆம் தேதி முதல்
21-ஆம் தேதி வரை அதாவது 2 வாரத்தில் மட்டும் 11பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர் போரூர், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி முருகன் (வயது 21) என்பவராவார். இவர் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வளசரவாக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.அவரையும் சென்னை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணை யர் அருண் கூறுகையில்,
“பொது மக்களின் நலனே முக்கியம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வரு கிறோம். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.