24.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அநீதி – நிட்டி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு: தமிழ்நாடு எம்பிக்கள் டில்லியில் இன்று போராட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயி களுக்கு திட்டங்கள் எதுவும் இல்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சி முழு ஆதரவு.
* ஆந்திரா, பீகாருக்கு அள்ளிக்கொடுத்த நிர்மலா சீதாராமன்.. எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு முழக்கம்.
* நீட் தேர்வு மோசடி வழக்கில் மறுதேர்வு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி முதலமைச்சர்களும் அறிவிப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* யூனியன் நிதிநிலை அறிக்கை: ஒடிசாவிற்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக மறுத்துவிட்டதாக பிஜு ஜனதா தளக் கட்சி குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை “பாரபட்சமானது” என்று கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்ததால், பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் பெரும் மோதலை எதிர்நோக்கும்.
– குடந்தை கருணா