தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் டில்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேற்று (23.7.2024) சந்தித்து சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை மாணவர்களின் நலன் கருதி உடனே விடுவிப்பது குறித்து விவாதித்தனர். இதில், மக்களவை திமுக தலைவர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கெண்டனர்.