சேலம், ஜூலை 24- ஜூலை 15, 2024 அன்று சேலம் – கோட்டையில் நடைபெற்ற ‘நீட்’ ஒழிப்பு இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பெரும் பயண நிறைவு பொதுக்கூட்ட வரவு – செலவு சரிபார்த்தல் – சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.7.2024 அன்று பகல் 11.30 மணிக்கு அம்மாப்பேட்டை குயில் பண்ணையில் நடைபெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜீ, செயலா ளர் வழக்குரைஞர் சுரேஷ், மாந கர கழகத் தலைவர் அரங்க இளவரசன், பகுத்தறிவாளர் கழக மாநகரச் செயாளர் சோ.கல்பனா, மகளிரணி தோழியர் கண்ணகி, கமலம், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இ.தமிழர் தலைவர், வழக்குரைஞரணி அமைப்பாளர் செல்வக்குமார், அஸ்தம்பட்டி பகுதிச் செயலாளர் வீ.மணிமாறன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவு-செலவு சரிபார்க்கப்பட்டது.
வரவு-செலவு விவரம்: அன்ப ளிப்பு மூலம் வந்த ஊக்கத் தொகை யின் மதிப்பு – ரூ.3,61,681
நன்கொடை மூலமாக வந்த வரவு – ரூ. 1,95,657
மொத்தம் – ரூ. 5,57,338
நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் கட்டமைப்புகள், விழாச் செலவுகள் – ரூ. 4,61,650, மீதி கையிருப்பு – ரூ. 95,688
பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வழிகாட்டுதலின்படி 1 பயணக் குழுவிற்கு 1 பேச்சாளருக்கு நாள் ஒன்றுக்கு – ரூ. 1000 வீதம், 1 குழுவிற்கு – ரூ.5,000 ஆக 5 குழுவிற்கு – ரூ.25,000
20.7.2024 கலந்துரையாடல் தோழர்கள் மதிய உணவு பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழிகாட்டுதலின்படி – ரூ. 2600
ஆக மொத்தம் – ரூ. 27,600
மீதித் தொகையான ரூ.68,088அய் தலைமையிடத்து பொதுச் செயலாளரிடம் ஒப்படைக் கப்பட்டது – ரூ.68,088
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, ஊமை.ஜெயராமன், ஆத்தூர் சுரேசு ஆகியோரின் பொறுப்பு மாவட்டத்திலிருந்து, ‘நீட்’ ஒழிப்பு பிரச்சார வாகனப் பெரும் பயணத்தில் பங்கேற்ற இருபால் வீரர்களை அழைத்து, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அனுமதி பெற்று பாராட்டு விழா நடத்துவது என தீர்மானிக்கப்ட்டது.
இயக்கத்தில் இளைஞர்கள், மாணவர்களை பெருமளவில் சேர்க்கும் வகையில் பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது, குறிப்பாக கூட்டங்கள் நடைபெறாத பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை பெருமளவில் நடத்தவது என தீர்மானிக்கப்பட்டது.