பழனி-மானூர், ஜூலை24- பழனி கழக மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் மானூரில் ஒன்றிய கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு இதழ் நூற்றாண்டு – கலைஞரின் நூற்றண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் மானூர் இராமலிங்கம் கூட்டத்திற்கு தலைமையேற்றார். ஒன்றியச் செயலாளர் ச.பாலசுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத் துவக்கத்தில் திண்டுக் கல் ஈட்டி கணேசனின் மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடை பெற்றது.
துவக்கவுரையாக பெ.இரணி யன், ச.திராவிடச்செல்வன், பொன்.அருண்குமார் பேசினர். கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி எழுச்சி உரையாற்றினார். சுயமரியாதை இயக்க வரலாறு, குடிஅரசு இதழின் சாதனைகள் மற்றும் கலைஞரின் மதிநுட்பம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
இறுதியாக குண.அறிவழகன் நன்றி உரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், ஒன்றியத் தலைவர் மானூர் இராமலிங்கம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, பழனி ஒன்றிய தலைவர் இராதாகிருஷ்ணன், பழனி நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழிலாளரணி தலைவர் இரணியன், மாவட்ட இளைஞணி தலைவர் ப.பாலன், நகர இளைஞரணி குமார், வழக்குரைஞர் செல்லத்துரை, வீரக்குமார், கோரிக்கடவு கருப்புச்சாமி, மாணவர் கழகம் விக்ரம் தமிழ்ச்செல்வன், அலங்கியம் புள்ளியான், தாராபுரம் வழக்குரைஞர் சக்திவேல், அலங்கியம் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழனி ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வன், சி.இராதா கிருட்டிணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.