தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம்
சென்னை, ஜூலை 23- பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் சிறப்புக்கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், கடந்த 20.7.2024 அன்று ‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிதல்: சவாலா? சந்தர்ப்பமா?‘ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக் குநர் மருத்துவர் மீனாம்பாள் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் அறிமுக உரையாற்றினார். பெரியார் மருத்துவக் குழுமம் கிராமங்களில் முகாம்கள் அமைத்து அப்பகுதிகளில் பரவக்கூடிய நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகள், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதை எடுத்துக்காட்டி பாராட்டி, சிறப்புரை ஆற்ற வருகைதந்துள்ள மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் குறித்து அறிமுக உரையாற்றினார்.
மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ண னுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையாற்றினார்.
தந்தைபெரியார் சகாப்தத்தில் தமிழர்கள் உரிமைகளைப் பெற்று, ஆற்றல், திறமை உள்ளவர்ளாக தங்களால் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு நாடுகளில் நிரூபித்து பணியாற்றி வருகிறார்கள். நோயாளிகளுக்கு மட்டும் பயன்பட்டால் போதாது, அனை வருக்கும் பயன்பட வேண்டும் என்று பல் துறை மருத்துவ வல்லுநர்களை அழைத்து இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெரியார் மெடிக்கல் மிஷன் செய்து வருகிறது என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையுரையில் சுட்டிக்காட்டினார்.
படிக்காதவர்கள் தற்குறிகள் என்பதைப்போல, செயற்கை நுண்ணறிதல் (ஏ.அய்.) என்பது குறித்து பலரும் தற்குறிகளாக உள்ள நிலையில், கற்க வேண்டியது உலகளவு உள்ளது.
நாம் சொல்லாதவற்றை நம் குரலில், நம்மைப்போன்றே வரக்கூடிய அச்சம் உள்ளது. அதிர்ச்சியைத் தரும் துறை இது.
கணினியைக் கேட்டால் அனைத்தும் தெரிந்துகொள்ளலாம் என்கிற வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் அறுவைச் சிகிச்சை சர்ஜரி என்றால் 6,7 பாட்டில்கள் ரத்தம் தேவைப்படும். சர்ஜரி முடிந்த பின்னரும் ஒரு வாரம், 15 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். இப்போது ரோபோடிக்ஸ் மூலம் அறுவை சிகிச்சை எளிதாக நடைபெறுகிறது.
செயற்கை நுண்ணறிதல் (ஏ.அய்.) குறித்த புத்தகம் ஒன்றில், மருத்துவத்துறையில் அதற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். கண்ணைக் கொண்டே, ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்று என்கிற தகவல் வெளியாகியுள்ளது என்று தலைமையுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப் பிட்டார்.
‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிதல்: சவாலா? சந்தர்ப்பமா?‘ எனும் தலைப்பில் மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகையில், செயற்கை நுண்ண றிதல் (A.I.) என்றால் என்ன, மனித வாழ்வில் அதன் தாக்கங்கள் என்னென்ன மற்றும் அதனால் விளையக்கூடிய நன்மைகள், அதன் மூலம் ஏற்படுத்தப்படக் கூடிய கெடுதல்கள் உள்ளிட்டவற்றை அதிநவீன தொழில்நுட்பத்தை, மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள் ளக்கூடிய வகையில் பல்வேறு புள்ளிவிவரங்கள், ஆதார தகவல்களுடன் எடுத்துரைத்தார்.
அவர் உரையில்,
தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறோம் என்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். Human Intelligence நமக்கு வளர்ந்திருக்கிறது. ‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிதல் குறித்து நாம் பேசுகிறோம். திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகளில் 80 ஆண்டுகளாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
Ray Kurzweil என்பவர் Technological Singularity தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கூறுகிறார்.
மனித மூளையைவிட செயற்கை நுண்ணறிதல் (Artificial Intelligence-A.I.) வளர்ந்து கொண்டிருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் நூறு ஆண்டுகளைவிடவும் முன்னேற்றம் காணப்படுகிறது. அடுத்த 90 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஆண்டுகளை விட முன்னேற்றததை அடைய முடியும்.
மனித மூளையைக் கொண்டு (Inspiration), மூளையில் உள்ள நியூரான்களின் செயல்பாடு களைக்கொண்டு செயற்கை நுண்ணறிதல் (A.I.) உருவாக்கம் ஆகியுள்ளது.
நாங்கள் படிக்கின்ற போது நூலகங்களுக்கு சென்று ஓரிரு மாதங்களில் தேடிக் கிடைக்கின்ற தகவல்கள் இப்போது, உடனுக்குடன் கிடைக் கின்றன. செயற்கை நுண்ணறிதல் (A.I.) முதுகெலும்பு தரவுகள்தான்-Datas. தங்கம், எண்ணெய் வளத்தைவிடவும் தரவுகள், தகவல்களுக்கு Information முக்கியத்துவம் மதிப்பு அதிகம்.
இங்கெல்லாம் காத்து, கருப்பு என்கிற மூடநம்பிக்கையைப்போல், லண்டனில் காலரா-வயிற்றுப்போக்கு, உயிரிழப்புகள் ஏற்பட்ட காலத்தில் black magic என்று மூடநம்பிக்கை இருந்தது. அதற்குரிய காரணத்தை ஆராய, அந்த நோய் ஏற்பட்டு, பரவிய இடங்களில் (Importance of DATA) தரவுகளை சேகரித்து, அறிவியலாளர் டாக்டர் ஜான் என்பவர்தான் அசுத்தம் கலந்த தண்ணீர்தான் காரணம் என்று கண்டறிந்து கூறினார். மூடநம்பிக்கையால் அல்ல என்பதை நிறுவினார்.
Data, Information, knowledge, Wisdom என்று செயற்கை நுண்ணறிதல் (A.I.) கல்வியில் வரும் காலத்தில் முக்கியமானதாகிவிடும். மனிதர்களின் செயல்பாடுகள்மூலம் தரவுகள் திரட்டும் A.I. தொழில் நுட்பம்.
Alan Turing மற்றும் பலரும் இந்த செயற்கை நுண்ணறிதல் (A.I.) குறித்து ஆராய்ந்தார்கள். 1950, 1980, 1990 களில் தொடர்ச்சியாக இதற்கான ஆய்வு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய செஸ் வீரர் காரி காஸ்பரோ கணினியுடன் செஸ் போட்டியில் தோல்வி அடைந்தார். சதுரங்க விளையாட்டில் பல்வேறு வெற்றித்தரவுகளைக்கொண்டிருந்த கணினியே வெற்றி பெற்றது.
மருத்துவத்துறையில் A.I. பங்களிப்பு என்று வரும்போது, Green Button என்று நோயாளிகள், மருத்துவர்கள் தொடர்பு இருக்கும்.
மரபணுக்கள், வாழ்ந்த விதம், வளரும் விதம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளுடன் மருத்துவத்துறையில் A.I. பங்களிப்பு இருக்கும். வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பயன்படாமல் எல்லோருக்கும் பயன்பட வேண்டும்.
மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றி, பரவக்கூடிய நோய்கள் முறியடிப்புக்கு திராவிட இயக்க முன்னெடுப்புகள் காரணமாக உள்ளன. இங்கே திராவிட இயக்கத்தால் பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டு வந் துள்ளனர்.
பன்னாட்டளவில் அமெரிக்கா, இங்கிலாந்து வரிசையில் தமிழ்நாடு மருத்துவத்துறை வளர்ச்சியில் உள்ளது. திராவிட இயக்கம் எல்லாருக்கும் எல்லாம் என்கிற நிலையை உரு வாக்கியுள்ளது என்று மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார். பெரியார் மணியம்மை மருத்துவ மனை மருத்துவர் பி.இராஜேஸ்வரி நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மோகனா வீரமணி, மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் மாணாக்கன், சுதா அன்புராஜ், தங்க.தனலட்சுமி, இறைவி, பெரியார் திடல் பணியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.