இதுதான் ‘நீட்!’

Viduthalai
1 Min Read

12 ஆம் வகுப்பில் மதிப்பெண்
இயற்பியல் – 21 மதிப்பெண்கள்
வேதியியல் – 31 மதிப்பெண்கள்
உயிரியல் – 39 மதிப்பெண்கள்
ஆங்கிலம் – 59 மதிப்பெண்கள்
மொத்தம் 352/700
ஆனால், நீட் மதிப்பெண் 705/720
பெற்றோரும், டாக்டராக இருக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் கதை இது.

பல ஏடுகளிலும் வெளிவந்துள்ள தகவல் இது!
தகுதி – திறமை பேசுவோரின் கருத்துப்படிப் பார்க்கப் போனாலும் தகுதி– திறமையைத் துல்லியமாக அளவிடுவது 12 ஆம் வகுப்பு (+2) தேர்வில் பெறும் மதிப்பெண்தான் என்பது இதன்மூலம் தெரியவில்லையா?
திறமையான மாணவி என்றால், ‘நீட்‘ தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 705 மதிப்பெண் பெறும் ஒரு பெண், +2 தேர்வில் இயற்பியலில் 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தது ஏன்?

நீட் தேர்வில்
720–க்கு 705 மதிப்பெண் பெற்ற பெண் படித்த பள்ளி நிர்வாகம் ‘‘இந்தப் பெண் சுமாராகப் படிக்கும் மாணவி என்றுகூடக் கருத முடியாது. அத்தகைய ஒரு பெண் ‘நீட்‘ தேர்வில் 720–க்கு 705 மதிப்பெண் எப்படி பெற்றிருக்க முடியும்” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். பள்ளிக்கு வருகையிலும் குறைபாடு உள்ள மாணவியாக அவர் இருந்திருக்கிறார்.
‘நீட்‘ என்றும், ‘தகுதி திறமை‘ என்றும் உளறும் கூட்டத்தினர், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், இந்தக் குஜராத் மாநிலப் பெண்ணை உதாரணத்துக்காக எடுத்துக் கொள்ளலாமே!
எடுத்துக்கொள்ள மாட்டார்கள் – தவறான குறுக்கு வழியில் காரியம் சாதிக்கும் அந்த வாய்ப்புக் கெட்டுவிடும் அல்லவா!

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *