செந்துறை, ஜூலை 23- அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் இருங்களாக்குறிச்சியில் மாநில ப.க அமைப்பாளர் தங்கசிவமூர்த்தியின் மாமனாரும், ஆசிரியர் வி.சிவசக்தி, வேளாண் அலுவலர் வி.வேல்முருகன் ஆகியோரது தந்தையுமான இரா.விசுவநாதன் படத்திறப்பு நிகழ்ச்சி 13.7.2024 அன்று காலை 11:00 மணி யளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகம் தலைமையேற்க, மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் செ..சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன், திருக்குறள் மன்றத் தலைவர் இராவணன், தமிழ் பண்பாட்டு பேரவை அமைப்பு செயலாளர் அ. நல்லப்பன், காப்பாளர் சு.மணிவண்ணன், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் பேராசிரியர் ஆ.அருள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் செ.ஜெயராமன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இ. எழில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ஈ ராஜேந்திரன், தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், தி.மு.க. மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ச.அ.பெருநற் கிள்ளி ஆகியோர் இரங்கல் உரையாற்றியதை தொடர்ந்து தலைமை கழக சொற்பொழிவாளர் புலவர்நாத்திக நம்பி அவர்கள் இரா.விசுவநாதன் படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். வேளாண் அலுவலர் வேல் முருகன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில் குமார், மாவட்ட விவசாய அணித் தலைவர் மா.சங்கர், விவசாய அணி செயலாளர் ஆ.இளவழகன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா. மதியழகன், செயலாளர் வெ. இளவரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன், மாவட்ட ப.க தலைவர் பெ. நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் உள்ளிட்டோர் பங்கேற்று இரங்கல் தெரிவித்தனர்.