திருமானூர், ஆக.18 அரியலூர் மாவட் டம் திருமானூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 13.8.2023 ஞாயிறு மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது. திருமானூர் ஒன்றிய கழகத் தலைவர் க. சிற்றரசு தலைமையேற்க, ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன் வரவேற்புரையாற்றினார். கழக காப் பாளர் சு. மணிவண்ணன், திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர்உத்திராபதி, நாயக்கர் பாளையம் முனைவர் கி. சவுந்தரராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
குல மாணிக்கம் பேராசிரியர் இ.வள னறிவு, மேனாள்திமுக மாவட்ட துணைச் செயலாளர் ந.தனபால், திரு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செய லாளர் இரா. கென்னடி, மாவட்ட செய லாளர் மு.கோபாலகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகி யோர் உரையாற்றிய பின்னர் கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில், வைக்கம் போராட்ட வரலாற்றினை விளக்கியும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நூற் றாண்டு விழா கொண்டாட வேண்டிய காரணங்களை விளக்கியும் மூடநம்பிக் கைகளால் நம்முடைய சமுதாயம் பாழ் பட்டு கிடப்பதை- சீர்திருத்த வேண்டிய காரணங்களையும் விளக்கி சிறப்புரை யாற்றினார்.திருமானூர் நகர செயலாளர் சு.சேகர் நன்றி கூறினார். பெரம்பலூர் மு.விஜயேந்திரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை செய்து காட்டி சாமி யார்களின் மோசடிகளை தோலுரித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மா.சங்கர்,பொன் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. செந்தில், மாவட்ட தொ.அ. தலைவர் தா.மதியழகன், அரி யலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து ஒன்றிய இ.அ. தலைவர் க. மணிகண்டன், உல்லியக்குடி வை. கலையரசன், சங்கர் அப்பா சாமி, அன்னிமங்கலம் சு .பார்த் திபன் அரண்மனைக் குறிச்சி முரு கேசன், தேளூர் முருகையன் ஆண்டி மடம் த.கு. பன்னீர்செல்வம் திருமானூர் சே.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.