போபால், நவ. 18- மத்தியப் பிரதேசத் தில் உள்ள 230 சட்டப்பேரவை களுக்கு நேற்று (17.11.2023) ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் மொத் தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 70 தொகுதிகளில் 2-ஆம் கட்ட தேர்தலும் நடை பெற்றது.
மத்தியப் பிரதேசத்தில் 71.16%, சத்தீஸ்கரில் 68.15% வாக்குகள் பதிவாகின. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முத லமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், மத்திய அமைச்சர்கள் நரேந் திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி, பகு ஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. நக்சல் பாதிப்பு உள்ள பாலகாட், மண்ட்லா, திந் தோரி மாவட்டங்களில் சில வாக் குச்சாவடிகளில் மட்டும்மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றது. மத்தியப் பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண் ணிக்கை 5.6 கோடி. வாக்குச்சாவடி களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்த னர்.
இங்கு 5,000 வாக்குச்சாவடிகளை பெண் அதிகாரிகளும், 183 வாக்குச் சாவடிகளை மாற்றுத் திறனாளி களும் இயக்கினர். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. போபாலில் 80 வயதுக்கு மேற்பட்ட 2,510 வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் முறையை தேர்வு செய்ததாக போபால் ஆட்சி யரும், மாவட்ட தேர்தல் அதிகாரி யுமான ஆசிஸ் சிங் கூறினார்.
42,000 வாக்குச் சாவடி மய்யங் களில் வெப் கேமரா வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மத்தியப் பிரதேசத்தில் மாநில காவல்துறையினருடன் இணைந்து 700 கம் பெனி மத்தியபடையினரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தூரில் பாஜக – காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்டமோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். ராஜ்நகர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சிங்குடன் சென்ற காங்கிரஸ் பிரமுகர் சல்மான் கான் மீது,பாஜக வேட்பாளர் அரவிந்த் படேரியா வுடன் வந்த ஆதரவாளர்களின் கார் மோதியது. இதில் சல்மான் கான் உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக பிரமுகர்களின் கார்களை அடித்து நொறுக்கினர்.
ஒருசில சம்பவங்கள் தவிர, வாக் குப்பதிவு அமைதியாக நடைபெற் றது. மாலை 5 மணி வரை 71.16 சதவீத வாக்குகள் பதிவாகின.
சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு:
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. நக்சல் பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் கடந்த 7-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற் றது. இந்நிலையில், இதர 70 தொகு திகளுக்கு நேற்று 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் உட்பட 958 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,800-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்குதொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத் துடன் வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 68.15 சதவீத வாக்குகள் பதிவாகின.
நக்சலைட் தாக்குதல்:
சத்தீஸ்கர் மாநிலம் பாதே கோப்ரா வாக்குச்சாவடியில் மாலைவாக்குப் பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் வாக்குப் பெட்டிகள் ஒப்படைக்கும் மய்யத்துக்கு திரும் பினர். அப்போது அவர்களை குறி வைத்து நக்சலைட்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையை சேர்ந்த தலைமை காவலர் ஜொகிந்தர் சிங் உயிரி ழந்தார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பதிவான வாக்குகள், டிச.3 ஆ-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படும்.