சென்னை வியாசர்பாடி அ. பாலன் – பா. நிர்மலா ஆகியோரின் மகளும், திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளருமான வழக்குரைஞர் பா. மணியம்மை – செந்துறை குழுமூர் கிராமம் வே. ரவீந்திரன், – ர. செல்வம்பாள் ஆகியோரின் மகன் இர. இராஜசேகர் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்தார். உடன்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, எழுத்தாளர் ஓவியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், மோகனா அம்மையார், சி. வெற்றிச்செல்வி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (சென்னை, 21.7.2024)
திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை – இர. இராஜசேகர் ஆகியோரின் மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a Comment