சென்னை, ஜூலை 22- பராமரிப்புப் பணி காரணமாக நாளை (23.7.2024) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14ஆம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் வருகிற 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில்கள் வருகிற 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30 மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் வருகிற 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரயில்களும், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரயில்கள் வரும் 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு14ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.
கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.