டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மோடியின் ஆட்சி விரைவில் கவிழும்: மம்தா, அகிலேஷ் கணிப்பு.
* பணி ஓய்வு பெறும் நீதிபதிகள் அரசியலில் நுழைய தடை, தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அமெரிக்க அதிபர் தேர்தல்.. இறங்கி வந்த ஜோ பைடன்.. போட்டியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு; துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்புத் தகுதி, கன்வார் யாத்திரை வணிகர்கள் பெயர் பலகை உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு.
* கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை உணவகங்களின் பெயர் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற உ.பி.அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்தரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்ய வேண்டும் என்று அபிஷேக் கோரிக்கை;
தி இந்து:
* அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி. 58 ஆண்டுகால தடையை நீக்கிய மோடி அரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம்.
தி டெலிகிராப்:
* பாடத்திட்டத்தில் அம்பேத்கர் கூறிய சில கருத்துகள் நீக்கம்; மத்திய ரேகா, சிந்து-சரஸ்வதி நாகரிகம் பற்றிய குறிப்புகள் சேர்த்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.
* ‘மெக்டொனால்ட்ஸ் மற்றும் பர்கர் கிங் விற்பனை நிலையங்களில் அவர்கள் என்ன பெயரை எழுத வேண்டும்? கடைக்குப் பதிலாக சட்டைகளில் பெயரை எழுதச் சொல்வீர்களா? உ.பி. அரசின் ஆணையை கண்டித்து பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர் ஆர்.எல்.டி. கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி காட்டம்.
– குடந்தை கருணா