ஒசூர், ஜூலை 22- நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 5 முனைகளிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயண குழுவினரை ஒசூர் மாவட்ட எல்லையான சூளகிரி மில் திராவிட மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன் தலைமையில் வரவேற்று சூளகிரி ரவுண்டானாவில் நீட் தேர்வை ரத்து செய்க்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி குரல் முழக்கம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் கே.சி.பாக்கியராஜ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி இளம் பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர் சமுக நீதி மாணவர் அமைப்பு அ.கலீலுல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முகமது உமர் ஆகியோர் குழுவினரை பாராட்டி பயன்பாட்டை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து ஒசூரை நோக்கி வழியனுப்பி வைத்தனர்.
ஒசூரில் நீட் ஒழிப்பு பயண பரப்புரை குழுவினரை திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, காங்கிரஸ் மாநகர தலைவர் தியாகராசன்,தமிழக மாணவர் இயக்கம் செல்வராஜ், புரட்சி கரதொழிலாளர் முன்னணி மாணிக்கவாசகம் ஆகியோர் காத்திருந்து பயண குழுவினரை வரவேற்று பயன்பாட்டை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் 20 நிமிடம் உரையாற்றினார்.திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் நீட் ஒழிப்பு கையேடு 100 பிரதிகளும், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா 50 பிரதிகளும்,தலைமை செயற்குழு உறுப்பினர் கவிஞர் எல்லோரா மணி 50 பிரதிகளும் பெற்றுக் கொண்டு பயண குழுவினரை பாதுகாப்புடன் செல்லுங்கள் என வாழ்த்துக்கள் தெரிவித்து இராகோட்டைக்கு வழி அனுப்பி வைத்தனர்.இராயகோட்டை பேருந்து நிலையத்தில் பயண குழுவினரை காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகிரி நாடாளு மன்ற உறுப்பினர் கே.கோபிநாத், மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர்ஆலம், சிபிஅய் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.முருகன்,சிபிஎம் கட்சி தூர்வாசன், காங்கிரஸ் வட்டார தலைவர் சுந்தர்ராஜ்,மே17 இயக்கம் மோகன்ராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தெகுதி செயலாளர் செந்தமிழ் மக்கள் அதிகாரம் தோழர் ரஞ்சித் குமார் ஆகியோர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் வரவேற்றனர்.மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வின் பேரறிவு அனைவரையும் வரவேற்றார்.
திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.
முடிவில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற கே.கோபி நாத் அவர்களுக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் சால்வை போர்த்தி திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.நீட் ஒழிப்பு கையேடுகளை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், சிபிஅய் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.முருகன் சமுக செயல்பாட்டாளர் முகமது அலாதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி மகளிர் பாசறை மாவட்ட தலைவர் கோ.கண்மணி, மேனாள் மாநில சட்ட கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் க.கா.வெற்றி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி,பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், திராவிட மாணவர் கழகம் மாவட்ட தலைவர் செந்தமிழ் பகுத்தறிவு, செயலாளர் க.கா.சித்தாந்தன்,தருண், சிதருன்,கேகுல்குமார்,வாசு, ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செ.பேரரசன், அசோக்குமார்,சதீஸ், அரவிந்த்,பிரசாந்குமார்,கெளதம், முருகன்,வினாயகர்,தாமஸ்,மாலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊடக பிரிவு இளையராஜா, மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி,மே17இயக்கம், மனித நேய ஜனநாயக கட்சி, தமிழக மாணவர் இயக்கம், புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.