காஞ்சிபுரம், ஜூலை 22- நீட் தேர்வை எதிர்த்து நடந்த வாகனப் பிரச்சார பேரணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு ஊர்களில் 13.7.2024 அன்று நடைபெற்றது.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தின் அருகில், மாவட்ட இணைச் செயலாளர் ஆ.மோகன், வாலாஜாபாத் ஒன்றிய அமைப் பாளர் செல்வம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ.ரேவதி உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் சிறப்பாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எல்லையிலிருந்து காவல் துறையின் ஜீப் வாகனம் வந்தது. அதனைப் பின்தொடர்ந்தது இரண்டு இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி மாநகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக வந்தனர். காவல்துறையின் வாகனத்தைப் பின் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்களின் வாகனங்களும், நீட் எதிர்ப்புப் பிரச்சார வாகனப் பெரும்படையும் வந்தன.
காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் சிலை அருகில், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரையாற்றிய பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் மன்றம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம், மக்கள் வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளிட்ட பல அமைப்பினர் பங்கேற்றனர்.
வேறு எந்த ஊரிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பான வகையில் காஞ்சிபுரத்தில் காவல்துறையின் போக்குவரத்து சரிசெய்யும் பணியும், அணிவகுப்பும் இருந்ததாக தொடர் பயணத்தில் வந்தத் தோழர்கள் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்ச்சியை, மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி, தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் பா.கதிர வன், மாவட்ட கழகச் செயலாளர் கி.இளைய வேள், மாநகரத் தலைவர் ந.சிதம்பரநாதன், செயலாளர் ச.வேலாயுதம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.இளம்பரிதி, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் கோவிந்தராஜி, தோழர் ரவிபாரதி, தமிழ்மாறன், எம்.டில்லி பாபு, படப்பை சந்திரசேகரன், நாத்திகம் நாகராசன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.