வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை

2 Min Read

சென்னை, ஜூலை 22- 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-இல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல் படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அதேபோல் போராட்டத்தில் ஈடு படும் மாணவர்களுக்கும், காவல்துறை யினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாண வர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாநிலத்தின் அரசு தொலைக்காட்சி நிலை யத்துக்கு தீவைத்ததை தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமடைந்தது.
அதேபோல் தலைநகர் டாக்கா வின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத் ததை தொடர்ந்து, சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அலைபேசி இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆங்காங்கே வன் முறை நிகழ்வுகள் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாயகம் திரும்பி வருகின்றனர். இதுவரை சுமார் 1,000 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி உள்ளதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரி வித்துள்ளது.
இந்த நிலையில், வங்காள தேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேற்று இரவு 7.30 மணியளவில் வங்காளதேசத்தில் இருந்து இரு விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் தாயகம் திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வங்கதேசத்தில் இருந்து அடுத்தகட்டமாக 60 பேரை அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *