பரிதாபத்துக்கு உரிய அதிமுக

Viduthalai
1 Min Read

ஜெயிலர் பட டிக்கெட் வழங்கி மதுரை மாநாட்டுக்கு அழைப்பு

மதுரை ஆக 18- நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்பட அனுமதிச் சீட்டுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி மதுரையில் இம்மாதம் 20ஆம் தேதி அதிமுக மாநில எழுச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அக்கட்சியினர் அழைப்பு விடுத்தனர். 

கோவில்பட்டியில் இரு திரையரங்குகளில் அப்படம் வெளியாகியுள்ள நிலையில், 16.8.2023 அன்று காலை நடைபெற்ற காட்சிகளுக்கான அனுமதிச் சீட்டுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொத்தமாக வாங்கி, கட்சியின் மாவட்டச் செயலர் சட்டமன்ற உறுப் பினர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *