சென்னை ராயப்பேட்டை – ஆர்.கே.சாலை இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பணி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

2 Min Read

சென்னை, ஜூலை 22- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட் வரை யிலான 3ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை நோக்கி சுரங்கப்பாதை பணி நேற்று (21.7.2024) தொடங்கியது. இதற்காக, “பவானி” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4கி.மீ) 3ஆவது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4ஆவது வழித்தடம், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5ஆவது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்ட மிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட் வரை யிலான 3ஆவது வழித்தடத்தில், ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்.கே சாலை) நோக்கி 910 மீட்டர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நேற்று (21.7.2024) தொடங்கியது.

இந்த பணியை மேற்கொள்ள “பவானி” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் சுரங்கம் தோண்டும் பணியை, சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முயற்சிகள் துறை முதன்மை செயலர் ஹார் சகாய், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, ஆலப்பாக்கத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். 4ஆவது மற்றும் 5ஆவது வழித்தடங்கள் 3.7 கி.மீ. தொலைவுக்கு இணையும் வகையில், இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை அமைக்கப்படுகிறது.

இங்கு இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை அமைக் கும்பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையப் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *