கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

21.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 27 ஆம் தேதி டில்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிட்டி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க இருக்கிறார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< சரத் பவார் அணியில் இருந்து அஜித் அணிக்கு தாவிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் சரத் அணிக்கு தாவ முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< 2013-2017க்கு இடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 410 ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தி இந்து:
< இன்றைய இந்தியாவுக்கான ஆய்வகமாக குஜராத் இருந்தது’ என்கிறார் பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட்.
< ஓபிசி சிவில் சர்வீசஸ் வேட்பாளர்களுக்கு எப்போதும் இரண்டு வெவ்வேறு வருமான சோதனைகள் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் கட்டுரையாளர்.
< மூடநம்பிக்கை, சூனியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய, மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தி டெலிகிராப்:
< நமது படிப்பு, ஒரு களமாக வரலாற்று ரீதியாக இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் மறைமுக நோக்கங்களை முன்னேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக நாம் செயல்பட வேண்டும் என பதக்கம் வென்ற அய்.அய்.டி. மாணவன் உள்பட மாணவர்களுக்கு வேண்டுகோள்.
< பத்திரிகை சுதந்திரம் தொடர்பான ஊடக சட்டங்கள் குறித்து ராகுல் காந்திக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடிதம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
< நீட் தேர்வு முடிவுகள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், தொழிற்சாலை போல் இயங்கும் பயிற்சி மய்யங்களில் பயின்றவர்கள்.
< மக்களவை துணைத் தலைவர் பதவி தங்களுக்கு வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் தர முடிவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *