காவிரி நீர் உரிமை கோரி
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
(தஞ்சாவூர், 23.7.2024)
1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
2. போராட்டம் போராட்டம்
காவிரி நீர் உரிமைக்காக
காவிரி நீர் உரிமைக்காக
போராட்டம்! போராட்டம்!
3. கருநாடக அரசே, கருநாடக அரசே
அமல்படுத்து – அமல்படுத்து
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை
அமல்படுத்து – அமல்படுத்து!
4. கருநாடக அரசே, கருநாடக அரசே
உச்சநீதிமன்ற தீர்ப்பினை
உச்சநீதிமன்ற தீர்ப்பினை
செயல்படுத்து, செயல்படுத்து!
5. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும்
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும்
செயல்படுத்து – செயல்படுத்து!
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமே,
மேலாண்மை வாரியமே!
கருநாடக அரசுக்கு கருநாடக அரசுக்கு
ஆணையிடு! ஆணையிடு!
6. எங்கள் உரிமை எங்கள் உரிமை
காவிரி நீர் காவிரி நீர்
எங்கள் உரிமை, எங்கள் உரிமை!
7. பிச்சையல்ல – பிச்சையல்ல
காவிரி நீர் கேட்பது காவிரி நீர் கேட்பது
பிச்சையல்ல – பிச்சையல்ல
எங்கள் உரிமை! எங்கள் உரிமை!!
8. தனி உடைமையல்ல – தனி உடைமையல்ல
காவிரி நீர் காவிரி நீர்
கருநாடக மாநிலத்தின்
கருநாடக மாநிலத்தின்
தனி உடைமையல்ல – தனி உடைமையல்ல!
9. ஒன்றிய அரசே, பிஜேபி அரசே
வேடிக்கை பார்க்காதே, வேடிக்கை பார்க்காதே!
காவிரிநீர்ப் பிரச்சினையில், காவிரிநீர் பிரச்சினையில்
வேடிக்கை பார்க்காதே, வேடிக்கை பார்க்காதே!
10. சட்டப்படி நடந்திடு
சட்டப்படி நடந்திடு
நீதிமன்ற தீர்ப்பினை
நீதிமன்ற தீர்ப்பினை
கையில் எடு! கையில் எடு!!
11. தேசியம் பேசும் அண்ணாச்சி
தேசியம் பேசும் அண்ணாச்சி
காவிரி நீர் என்னாச்சு – என்னாச்சு!
12. காயுதே காயுதே
பயிர்கள் எல்லாம் காயுதே!
கருநாடக அரசே, கருநாடக அரசே
திறந்து விடு, திறந்து விடு
தமிழ்நாட்டுக்கு உரிய நீரை
தமிழ்நாட்டுக்கு உரிய நீரை
திறந்து விடு – திறந்து விடு!
சட்டப்படி திறந்து விடு!
13. வடிகால் பகுதியா வடிகால் பகுதியா?
கருநாடக மாநிலத்துக்கு-கருநாடக மாநிலத்துக்கு
தமிழ்நாடு வடிகால் பகுதியா – வடிகால் பகுதியா?
14. போராடுவோம் – போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை – வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் – போராடுவோம்
வெற்றி பெறுவோம் – வெற்றி பெறுவோம்!
15. கட்சியில்லை – பேதமில்லை
ஒன்றுபட்டு நிற்கிறோம்
ஒன்றுபட்டு நிற்கிறோம்
தமிழரெல்லாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்!
16. ஒன்றிடுவோம் – வென்றிடுவோம்
உரிமை சங்க நாதம்
முழங்கிடுவோம்! முழங்கிடுவோம்!!
– தஞ்சாவூர் மாவட்ட
திராவிடர் கழகம்