20.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மீண்டும் பாஜக ஹிந்துத்வாவை முன்னிறுத்தும் வகையில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உணவக உரிமையாளர்கள் தங்கள் பெயரை வைக்க கட்டாயப்படுத்துவதற்கு பாஜக கூட்டணிக் கட்சிகள் இடையே பிளவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*கன்வர் யாத்திரையில் புதிய சர்ச்சை – உணவு கடைகளில் உரிமையாளர் பெயர், முகவரி கட்டாயம்: உபி, உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவால் பரபரப்பு.
* உ.பி. அரசின் முடிவுக்கு, ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு. மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு ஜாதிக் கணக் கெடுப்பில் பாஜக எதிர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா? சர்ச்சை தொடர்கிறது.
* மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு: இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து, லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு
தி இந்து:
* 8 கோடி புதிய வேலை வாய்ப்புகள் குறித்து பிரதமர் ‘பொய்’ சொல்லி இளைஞர்களின் உணர்வை காயப் படுத்துகிறார் என்று காங்கிரஸ் கண்டனம்.
* சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பான சர்ச்சைகள் உள்ள நிலையில், யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி பதவிக் காலம் முடிவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகல்.
தி டெலிகிராப்:
* ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வர்ண, ஜாதி அமைப்பு குறித்த பாடங்களை நீக்கியது, என்.சி.இ.ஆர்.டி.
* 12 பொதுத்துறை வங்கிகளில் அரசு பங்குகளை மோடி அரசு குறைத்தால், காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும், ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை.
* கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் உரிமையாளர்களின் பெயர்களை காட்ட வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவு, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
– குடந்தை கருணா