நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த நாள்
1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, “ஈகிள்” என்று பெயர் கொண்ட ஆய்வுக்கலன், “கொலம்பியா”விலிருந்து பிரிந்தது.
கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ராங்கையும், ஆல்ட்ரினையும் சுமந்து கொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார்.
இப்பிரதேசம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது. ஆர்ம்ஸ்ட்ராங்கும், அவரது சக விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஆல்ட்ரினும் 2 மணிநேரம் 31 நிமிடங்கள் நிலவில் நடந்து, மாதிரி உருவங்களை சேகரித்தல், சில படிவ ஆராய்ச்சிகள் செய்தல் என்பவற்றுடன் தம்மை ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று- ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல். அப்பல்லோ 11 ( Apollo 11 ) பயணத் திட்டமே நிலவில் இறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5ஆவது ஆளேற்றிய பயணத் திட்டம்.
ஜான் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது. அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே உண்மை. மனித இனம் அறிவு வளர்ச்சி அடைந்த சில லட்சம் ஆண்டுகளாக விண்ணில் நிலவைப் பார்த்துவந்தாலும் நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கே இறங்கி மனித இனத்தின் காலடித்தடத்தை பதித்த நாள் இன்று.
முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் எட்வின் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ. உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்தத் தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது. பெருமைக்குரிய தருணம் அது என்றார். நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 20, 1969 திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர். அப்போது அவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.
சிவபெருமான் தலையில் சூடியிருக்கும் நிலவு என்ற மூடநம்பிக்கைக்கு மரண அடி கொடுத்த நாள் இந்நாள் (20.7.1969).