மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை ரூ.287.53 இலட்சம் கோடி. அதில் நாட்டின் பாதுகாப்பு, கடன் அதற்கான வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகை ரூ.97.25 இலட்சம் கோடி. மீதமுள்ள தொகை ரூ.190.28 இலட்சம் கோடி.
அதில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளித்த வரி ரூ. 2.92 இலட்சம் கோடி. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கிய தொகை ரூ. 2.56 இலட்சம் கோடி. ஆக மொத்தம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி ரூ. 5.48 இலட்சம் கோடி
அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இராணுவம், கடன், வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்டது போக மீதமுள்ள ரூ. 190.28 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது ரூ. 5.48 இலட்சம் கோடி. சுருக்கமாக சொன்னால் 2.88%.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6% மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.68% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இருந்தும் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது வெறும் 2.88%
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு தோராயமாக 10 ஆண்டுகளில் 13 விழுக்காட்டிற்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளது
மோடி ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கிய குறைவான நிதியிலேயே கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கி மூன்று துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி உள்ளது.
இந்த குறைவான நிதியிலும் தமிழ்நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து பேரிடர்களை எதிர்கொண்டு வலுவான மாநிலமாக திகழ்கிறது.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் 13 விழுக்காடு செலவிட்டும் அங்கு இன்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சையின் போதே மரணிக்கும் அவலம்,
இரவு செல்வந்தர்களின் வீடுகளில் மீந்துபோகும் ரொட்டிகளைச் சேகரித்து அதை மதிய உணவாக வெறும் ரொட்டியும் உப்பும் கொடுக்கும் கொடூரம்(இதைப் படம் பிடித்து வெளியிட்ட ஊடகவியலாளர் மீது தேசப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது அதைவிடக் கொடூரம்.
மருத்துவமனைகள் உயர்ஜாதியினருக்கானவை என்றாகிவிட்டது.
கடந்த ஆண்டு மீரட் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் பிரசவவேதனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். வலி தாங்க முடியாமல் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்த அவரை மருத்துவமனை ஊழியர்களும் சில செவிலியர்களும் இழுத்துவந்து மருத்துவமனைக்கு வெளியே தள்ளிவிட்டனர். மருத்துவமனையின் வாசலிலேயே குழந்தை பெற்று மயங்கிக்கிடந்த கொடூரம் காணொளியாக பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதாவது உத்தரப்பிரதேசத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாகக் கொடுத்த நிதி அனைத்தும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதே போல் மோடி ஓடி ஓடிச்சென்று பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் அறிவிக்கிறார். அதுவும் எல்லாம் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்டு முடங்கிக்கிடக்கிறது.
ஆதாரம்: குட் ரிட்டர்ன்ஸ்