உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் பகுதில் உள்ள கோவில் ஒன்றில் இருந்த சாமி சிலைகளை யாரோ சிலர் எடுத்து அசிங்கப்படுத்தி உடைத்து குப்பையில் வீசிவிட்டுச் சென்றனர். இதனை அடுத்து அங்கு மதக்கலவரம் ஏற்படும் சூழல் உருவானது,
அக்கோவில் பூசாரி கிரிச்சரன் என்பவர் காவல்நிலையத்தில் அப்பகுதியில் உள்ள முன்னா மற்றும் சோனு என்ற இஸ்லாமிய சிறுவர்கள்தான் இதைச் செய்தனர்.
அதை நான் பார்த்தேன் என்று கூறினார். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை விசாரித்த போது அந்த நேரத்தில் அவர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் பூசாரி இவர்களைப் போல்தான் இரண்டு நபர்கள் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு 20 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறினார்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறுவதைக் கண்ட உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவரை சிறப்பான முறையில் விசாரிக்க – மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் நான் தான் சிலைகள் மீது அசிங்கத்தைப் பூசி அதை உடைத்து குப்பையில் வீசிவிட்டு இஸ்லாமியர்கள் மீது பழியைப் போடுவதற்கு திட்டமிட்டேன்.
இந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது போட நானே இரண்டு பெயரைக் கூறினேன், ஆனால், கூறிய சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்பவர்கள் என்று எனக்குத் தெரியாது இதனால் நான் சிக்கிக்கொண்டேன் என்று காவல்துறையினரின் விசாரணையில் கூறியுள்ளார்
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் சில அமைப்பினர் ஆட்களை வைத்து – இஸ்லாமியர்கள் குறைவாக வசிக்கும் ஊர்களில் – அவர்களின் மீது மதவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டினை சுமத்துவதற்காக திட்டமிட்டு கோவில்களில் இறைச்சி துண்டுகளை வீசுவது, பசுமாட்டுத்தலைகளை வீசுவது, சிலைகள் மீது அசிங்கத்தைப் பூசி உடைத்து குப்பையில் வீசுவது போன்ற நடவடிக்கைகளை செய்கின்றனர்.
இல்லை என்றால் ஊரில் உள்ள கோவில் அர்ச்சகர்களை அணுகி அவர்களுக்கு பணம் கொடுத்து இவ்வாறு செய்யத் தூண்டுகின்றனர்.
அலிகர் மாவட்டத்தில் இவ்வாறு நடந்த ஒரு நிகழ்வால் மதக்கலவரம் உருவாகியது. அம்மாவட்ட நிர்வாகமோ இஸ்லாமியர்களே இவ்வாறு செய்தனர் என்று கூறி இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்தனர்.
பின்னர் விசாரணை யில் அங்கு மதக் கலவரத்தைத் தூண்டியது குறிப்பிட்ட அமைப்பினர் என்று தெரியவந்தது,
இவர்களின் நடவடிக்கையால் அப்பாவி இஸ்லாமியர்கள் பாடுபட்டு கட்டிய வீடுகளை இழந்து வேறு மாநிலங்களுக்குச் செல்லவேண்டிய அவலம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்கிறது.
இதே போல் கடந்த ஆண்டு உத்தராகண்டில் போலி லவ்ஜிகாத் கதையை உருவாக்கினர்.
இதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், உத்தராகண்டில் உள்ள ஒரு சிறிய நகரமான புரோலா பரபரப்பாக இருந்தது.
நகரத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய ஹிந்து வலதுசாரி அமைப்புகளின் பிரச்சாரம் தேசிய ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாகியது. குறைந்தது 41 குடும்பங்கள் நகரை விட்டு வெளியேறின. அவர்களில் ஆறுபேர் உத்தரகண்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வேறு இடங்களில் குடியேறினர்.
ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றினால் 14 வயது ஹிந்து சிறுமியை லவ் ஜிகாத் மூலம் இஸ்லாமியர் இளைஞர்கள் 2 பேர் கடத்தி, முஸ்லீமாக மாற்ற முயன்றதாக குற்றஞ் சாட்டியது.
இதனை அடுத்து 22 வயதான உவைத்த்கான் மற்றும் 24 வயதான அவரது நண்பர் சைனி ஆகியோரை காவல் துறை கைது செய்தது.
கான் மற்றும் சைனி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறுவர்களை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சிறுவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அம்மாநிலத்தை ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களே இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று நேரடியாகவே பரப்புரை செய்தனர். இதனால் அங்கு வாழும் இஸ்லாமியர்கள் அந்நகரைக் கைவிட்டனர்.
ஆனால், நீதிமன்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் அப்பாவிகள் என்றும் 14 வயதுசிறுமியிடமிருந்து வெள்ளைத்தாளில் கையெழுத்து பெற்று அதில் போலியாக இவர்களே லவ்ஜிகாத் தொடர்பான கட்டுக்கதைகளைக் எழுதி இஸ்லாமிய நபர்களை சிக்கவைத்ததும் காவல்நிலையத்தில் அச்சிறுமியை உண்மைக்குப் புறம்பான தகவலைச் சொல்லுமாறும் அதிகாரிகளே அவரை மிரட்டியதும் தெரிவந்தது.
இதனை அடுத்து அந்த இஸ்லாமிய இளைஞர்களை ஓராண்டிற்குப் பிறகு நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால், ஹிந்துத்துவ அமைப்பினரால் மிரட்டப்பட்டதால் புரோலா என்ற சிற்றூரில் பல ஆண்டுகளாக வணிகம் செய்தும் விவசாயம் வாழ்க்கை நடத்திவந்த ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் வெளியேறி விட்டனர்.
அவர்களின் தோட்டாக்கள் மற்றும் வீடுகளை ஹிந்துத்துவ அமைப்பினர் அபகரித்துக்கொண்டனர்.
இனி அவர்களால் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் செல்லமுடியாத அவல நிலையை பாஜக ஹிந்துத்துவ அமைப்பினர் உருவாக்கிவிட்டனர்.