மதுரை, ஜூலை 19- திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி நீட் தேர்வு ஒழிப்பு மோட்டார் வாகனப் பிரச்சார பயணத்தின் முதலாவது குழு மதுரை நகருக்கு 12.7.2024 அன்று மாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது.
நகர எல்லைக்குள் நுழைந்த குழு வினரை பழங்கானத்தம் ரவுண்டானா அருகில் 25க்கும் அதிகமான தோழர்கள் மாவட்ட செயலாளர் இராலி.சுரேஷ் தலைமையில் எழுச்சியுடன் முழக் கங்கள் இட்டு, மதுரை கல்லூரி, பெரியார் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை வழியாக வந்தவர்களுக்கு, மதுரை தெற்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு இடத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் செல்வம் தலைமையில் பயணக் குழுவிற்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
பயணத்தில் வந்த அனைத்து தோழர் களுக்கும் பயனாடையை திராவிடர் கழகத்தின் காப்பாளர்கள் தே.எடிசன் ராசாவும், சே.முனியசாமியும் அணி வித்துப் பாராட்டினார்கள்.
தற்செயலாக மதுரைக்கு வந்திருந்த திராவிடர் கழக மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி பயணக்குழுத் தலைவர், திராவிடர் கழக மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர் பாண்டியனுக்கு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார் நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு அனைவரையும் வரவேற் றார்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, மாநிலச் செய்லாளர் பாவலர் சுப.முருகானந்தம், திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் வழக்கஞர் இராம.வைரமுத்து, மதிமுக தொழிற்சங்கப்பொறுப்பாளர் மகபூப்ஜான் ஆகியோர் இந்தப் பயணத்தின் நோக்கம் பற்றியும் தோழர்களை வாழ்த்தியும் உரையாற்றினார்.
இறுதியாக பயணக் குழுவின் சிறப்புப் சொற்பொழிவாளர், சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் மிக எழுச்சியாக உரையாற்றினார் .அவர் தனது உரையில் “இந்த நீட் தேர்வினால் அனிதா முதல் நாம் இழந்த மாணவ மாணவிகளின் உயிர்கள், இந்த நீட் தேர்வு என்பது எவ்வளவு மோசடியாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்த நீட் தேர்வு என்ற அறிவிப்பு வந்த உடனேயே முதல் எதிர்ப்புக் குரலாக திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய குரல் இருந்தது. வரக்கூடிய பேராபத்தை முன்னரே அவர் சுட்டிக் காட்டியதையும், இன்றைக்கு எல்லா மாநிலங்களிலிருந்தும் இந்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல் வருவதையும் குறிப்பிட்டார்.இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதிலும் இன்று வரை ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் இந்த மோசடியை விளக்கித் தான் தமிழ்நாட்டில் அய்ந்து முனைகளில் இருந்து நம்முடைய தோழர்கள் மாணவர் அணி இளைஞரணி இருபால் இளைஞர்கள் ஒவ்வொரு ஊராக இப்படி நீட் ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் திரா விடர் கழகம் மேற்கொண்ட எந்த போராட் டமும் தோற்றதில்லை இறுதி வெற்றி நமதே” என்றும் குறிப்பிட்டு மிகச் சிறப்பாக வரவேற்பு அளித்த மதுரை மாநகர் மாவட்ட தோழர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இறுதியாக மாவட்ட துணைச்செயலா ளர் வடக்குமாசிவீதி சிவா நன்றி கூறினார். மகளிரணித் தோழர்கள் கலைச்செல்வி, அல்லிராணி, பாக்கிய லெட்சுமி, தருமபுரி ஊமை.சிகாமணி, திராவிடர் கழக தொழிற்சங்க மாநிலப் பொறுப்பாளர் கருப்பட்டி சிவா, மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் எரிமலை, செயலாளர் முத்துக்கருப்பன், இளைஞர் அணி மாவட்டச்செயலாளர் தே.எ.பெரியார்செல்வம்,பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் எல்.அய்.சி. செல்லக்கிருட்டிணன், பேரா.சுப.பெரியார்பித்தன்,ஸ்டுடியோ சரவணன்.மதுரை மாவட்ட துணைத் தலைவர்கள், ந.முருகேசன், பவுன்ராஜ், துணைச் செயலாளர் தனுஷ்கோடி.பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் உள்ளிட்ட பயணக்குழுவினர் எனத் திரளாகத்தோழர்களும் பொறுப் பாளர்களும் திரண்டனர்.பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் உன்னிப்பாக இந்தக் கூட்டத்தைக் கவனித்தனர்.இறுதியில் நீட் எதிர்ப்பு முழக்கங்களோடு கூட்டம் நிறைவுற்றது.பயணக்குழுவினருக்கு சிறப்பான புலாலோடு மதிய உணவு பரிமாறப்பட்டு உற்சாமகமாக மதுரை மாவட்ட மக்கள் சார்பாக தோழர்கள்,போறுப்பாளர்கள் பயணக்குழுவினரை வழியனுப்பி வைத்தனர்.