டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்துவ அமைப்புகள் காங்கிரசுக்கு ஆதரவு.
* தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம், ரூ. இரண்டு லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு இரண்டு லட்சம் இளைஞர் களுக்கு வேலை என வாக்குறுதி அளித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கிரிக்கெட் வீரர்களுக்கு காவி உடை, மம்தா கடும் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரியானா மாநிலத்தவர்க்கு 75 சதவீத வேலை கட்டாயம் என்ற அரசின் ஆணைக்கு நீதிமன்றம் தடை.
* குமரி முனையிலிருந்து தொடங்கிய திமுக இளைஞரணியின் கருப்பு-சிவப்பு சீருடையுடன் கூடிய இருசக்கர வாகனப் பேரணி மக்கள் விரோத ஒன்றிய அரசின் அரசியல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை.
தி டெலிகிராப்:
* அய்.அய்.டி. மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் படிவங்களில் ஜாதியை குறிப்பிடச் சொல்லி பாகுபாடு ஏற்படுத்துகின்றனர் என புகார்.
எகனாமிக் டைம்ஸ்:
* தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 23 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும் என ராகுல் அறிவிப்பு.
– குடந்தை கருணா