கருநாடக மாநில திராவிடர் கழகக் காப்பாளர் வரதராஜன் அவர் தம் மகன், வருண்ராஜ் மணிமாறன் லண்டன் சென்று எம்.எஸ். பட்டம் பெற்றதன் மகிழ்வாக இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதியாக 25,000/- ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். வரதராஜன் இணையர் வெண்மலர் அண்மையில் மறைவுற்றிருந்தார். அதற்கு ஆசிரியர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். (பெரியார் திடல், 17.07.2024)