தஞ்சாவூர், ஜூலை 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நவீன தொழில் நுட்பக் பயிற்சிகளின் துவக்க விழா 4.7.2024 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இன்டஸ்ட்ரி 4.0 (Industrial 4.0 and Its Applications) என்ற தலைப்பிலான பயிற்சியை துவக்கி வைத்த பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஹேமலதா மாணவர்களை “தொழிற்சாலைகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை நன்கு கற்று திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
2024-2025ஆம் கல்வியாண்டின் அனைத்துத் துறை அய்ந்தாம் பருவ (V Semester) மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் நடைபெறுகின்றது. இயந்திரவியல் மற்றும் மாடர்ன் ஆபிஸ் பிராக்டீஸ் துறை மாணவ, மாணவிகளுக்கு (Mech & MOP) சென்னை TANCAM நடத்துகின்ற இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் அதன் பயன்பாடுகள் (Industry 4.0 and its Applications) பயிற்சி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை (EEE) மாணவர்களுக்கு சென்னை Ingage Technology நடத்துகின்ற இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Internet of Things) பயிற்சி, மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை (ECE) மாணவ, மாணவிகளுக்கு சென்னை, VI Microsystems நடத்துகின்ற பிரிண்டட் சர்க்யுட் போர்டு டிசைன் (Printed Circuit Board Design) பயிற்சி நடைபெற்று வருகின்றது.
மேலும் கணினித்துறை (CT) மாணவ, மாணவிகளுக்கு சென்னை Ingage Technology நடத்துகின்ற இண்டஸ்ட்ரியல் மெட்டாவெர்ஸ் (Industral Metaverse) பயிற்சி, சிவில் என்ஜினியரிங் மற்றும் கட்டட எழிற்கலை பிரிவு (Civil Engineering & Architectural Assistantship) துறைகளின் மாணவ மாணவிகளுக்கு சென்னை TANCEM நடத்துகின்ற பில்டிங் இன்பர்மேசன் மாடலிங் (Building Information Modelling) ஆகிய பயிற்சிகள் இப்பாலிடெக்னிக் கல்லூரி வளாகத் தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றி வளர்ச்சியடைந்த சமுதாய மாற்றத்தினை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இப்பாலிடெக்னிக் கல்லூரியின் SPOC ஆர்.அய்யநாதன் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சிகளை ஒருங் கிணைத்து வருகின்றார்.