இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓநாய் மற்றும் நாய் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான விலங்குகள் காணப் படுகின்ற னவாம். குறிப்பாக மகாராட்டிர மாநிலம் புனே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இந்த விசித்திர விலங்குகள் நடமாடுகின்றன.
பார்ப்பதற்கு ஓநாயை போலவே இருந்தாலும் ஆராய்ச்சியில் இது ஒரு கலப்பின விலங்காக உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே பெரும் ஆபத்து நேரலாம் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள். மகாராட்டிராவில் உள்ள சில வனப் பகுதிகளில் ஓநாய்களில் சற்று வித்தியாச மான விலங்கு தென்பட்டது. இது வழக்கமான ஓநாயை போலவும் இல்லை.
நாய்களை போலவும் இல்லை என வியந்த வன உயிரியல் ஆர்வலர்கள், வினோதமான இந்த விலங்கின் முடி மற்றும் மலத்தை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதில், இந்த வினோத விலங்கு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..
இந்த விலங்கு ஓநாய்-நாய்கள் என்று அழைக் கப்படுகின்றன. நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு பற்றி பன்னாட்டு அளவில் ஆய்வுகள் நடக்கிறது. இருந்தாலும் இந்தி யாவில் இத்தகைய ஆதாரங்கள் முதல் முறையாக இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஓநாய்-நாய் கலப்பின விலங்கால் என்ன மாதிரியான ஆபத்து என நினைக்கலாம்.
இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே ஆபத்து வரலாம் என்பதுதான் வன ஆர்வலர்களின் கருத்து. அதாவது, இந்த கலப்பின விலங்கு தனது இனத்தை பெருக்கும். வனப் பகுதிகளில் இந்த கலப்பினங்கள் உருவாவது மிகவும் ஆபத்து என்கிறார்கள்.
ஏனெனில், ஓநாய் இனத்திற்கு பெரும் ஆபத்து என்பதோடு அவற்றின் தனித்துவம் மரபணு அடையாளம் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.