இந்திய ரயில்வேயின் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும்போது ஏன் இருக்கையை தேர்வு செய்திட முடியவில்லை என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை தற்போது பார்ப்போம்.
இந்தியாவில் பல லட்சம் பேர் பணிபுரியும் மிகப் பெரிய துறையாகவும், தேசிய ஒருமைப் பாட்டை உணர்த்தும் ஒன்றாகவும் ரயில்வே உள்ளது. வெள்ளையர்கள் காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ரயில்வே கட்டமைப்பான இந்திய ரயில்வே, நாட்டின் போக்குவரத்து அமைப்பின் உயிர் நாடியாக திகழ்ந்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பயணத் தரத்தை மேம்படுத்து வதில் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
திரையரங்குகள், பேருந்துகளை ஒப்பிடு கையில் ரயில்களில் இருக்கை தேர்வு செயல் முறை வேறுபடுகிறது. இரண்டு தனித்துவமான அணுகுமுறைகளுக்குப் பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளன. திரையரங்கம் என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லக்கூடியது அல்லது. அதேபோல் பேருந்து என்பது குறிப்பிட்ட நீளம் மட்டுமே கொண்டது. ஆனால், ரயில்கள் தொடர்ந்து நகர்ந்து செல்லக் கூடியது. அதுவும் பல மீட்டர்கள் நீளம் கொண்டவை. எனவே, அய்ஆர்சிடிசி அல்காரிதம் தானாகவே இருக்கையை ஒதுக்கி, நகரும் நீளமான ரயிலில் சுமையை சமமாக பிரித்து வழங்குகிறது..
ஒரு உதாரணத்திற்கு, ஒரு ரயிலில் T1, T2, T3…..T10 என எண்ணப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகள் இருப்பதாகக் வைத்துக்கொள்ளுங்கள். எனவே ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 72 – 72 இருக்கைகள் இருக்கும். இப்போது ஒருவர் முதல் முறையாக ரயில் பயணச் சீட்டு பதிவு செய்தால், மென்பொருள் அவரை ரயிலின் நடுப்பகுதி பெட்டியில் இருக்கையை ஒதுக்குகிறது. அய்ஆர்சிடிசி முதலில் கீழ் படுக்கையை பதிவு செய்கிறது, எனவே ஈர்ப்பு மய்யம் குறைவாக இருக்கும்.
பயணத்தின் போது ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் ஒரே எண்ணிக்கையில் பயணிகளை கொண்டிருக்கும்படி அய்ஆர்சிடிசி மென்பொருள் வேலை செய்கிறது. ரயில் இருக்கைகளின் ஒதுக்கீடு நடுப்பகுதி இருக் கைகளில் இருந்து தொடங்கி, பின்னர் பெட்டியின் இருபக்க கதவுகளுக்கு அருகில் உள்ள இருக்கைகள் வரை செல்கிறது. இப்படி அய்ஆர்சிடிசி மென்பொருள், தனது அல்காரிதம் மூலம், ரயிலின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
இந்த சமநிலை தவறும்போது செண்ட் ரிஃபுகல் (Centrifugal) விசையின் காரணமாக ரயில் தடம் புரண்டு மிகப்பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இந்திய ரயில்வே பயணச் சீட்டுகள் தேர்வு செய்யும் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் விசயத்திற்கு பின்னால் எப்படிப்பட்ட அறிவியல் மற்றும் பாதுகாப்பு அம்சம் உள்ளது என்று பாருங்களேன்.